போலி கால்செண்டரில் ஆன்லைன் மோசடி: 12 பேர் கொண்ட சென்னையில் கும்பல் கைது

சென்னையில் போலிகால் சென்டர் நடத்தி வங்கிகளில் கடன் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஆன்லைனில் நடைபெற்ற மோசடி தொடர்பாக மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்கிகளில் கடன் பெற்றுத்தருவதாக ஆன்லைனில் நடைபெற்ற பணம் மோசடி புகார் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி தாம்பரம் அருகே சித்தாலப்பாக்கத்தில், போலி கால் சென்டர் நடைபெற்று வந்ததை கண்டு பிடித்தனர். இதுதொடர்பாக மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் கால் செண்டரில் பணி புரிந்த ஊழியர்கள் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வேளச்சேரி மற்றும் கந்தன்சாவடி பகுதியில் மேலும் இருவர் போலி கால்சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிவராமன், முத்துராமன் ஆகிய இருவரை, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக மேலும் 10 பேரைப்பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply