shadow

போலந்து நாட்டில் ரஜினி சாதனையை முறியடித்த ‘சர்கார்’ விஜய்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் ரஜினி படம் உள்பட இதுவரை வெளியான தமிழ்ப்படங்கள் ஒன்று அல்லது இரண்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியாவதுண்டு.

ஆனால் வரும் தீபாவளி அன்று வெளியாகும் ‘சர்கார்’ படம் போலந்து நாட்டில் உள்ள வார்சா, கிராகோ, வொரோகிளா மற்றும் ஜிடன்ஸ்க் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் போலந்து நாட்டில் முதல்முறையாக நான்கு திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை சர்கார் படைத்துள்ளது

அதேபோல் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் இந்த படத்தை மிக அதிக திரையரங்குகளில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் திரையரங்குகள் எண்ணிக்கையில் இந்த படம் ஒரு புதிய சாதனையை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply