shadow

பொன்.ராதாகிருஷ்ணனை மாறி மாறி சந்தித்த ஓபிஎஸ்-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

அதிமுக அணியினர்களின் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவும் ஒரே நாளில் மாறி மாறி சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு அங்குள்ள ஒரு விடுதியில் ஓய்வு எடுத்தார். அப்போது தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ கருணாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ சண்முகநாதன் ஆகியோர் மாறி மாறி தனியாக அமைச்சரை சந்தித்து பேசினர்

இருவருமே இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறினாலும் அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் எம்.எல்.ஏக்கள் பாஜக அமைச்சரை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply