shadow

பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டா? நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க கொடுக்க மறுக்கும் காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிலை கடத்தல் குறித்த வழக்குகள் நேற்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பொன்.மாணிக்கவேல் கூறுகையில், ’தனக்கு கிண்டியில் அலுவலகம் இல்லை என்றும், அலுவலகம் இல்லாமல் தான் தெருவில் நிற்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் தனக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு முற்றிலுமாக மீறியுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், அரசின் துறையை அரசே முடக்க நினைப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுபோன்ற செயலை அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என கண்டனம் எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அன்றைய தினம் அரசு தலைமை வழக்குரைஞர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Leave a Reply