shadow

பேத்தியின் மூளையில் தாத்தாவின் புகைப்படம்: ஸ்கேனில் தெரிந்த அதிசயம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தையின் மூளையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்த மூளையில் ஒரு புகைப்படம் போன்ற வடிவம் இருந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர்களிடம் கேட்டபோது அந்த புகைப்படம் அந்த குழந்தையின் தாத்தா உருவம் என்று கூறியதை கேட்டு அனைவரும் அதிசயத்தனர்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேன் குர்ரான்- ஜிம்மாஹுஜஸ் என்ற தம்பதிக்கு வின்னி என்ற குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்தது. இந்த குழந்தைக்கு மூளையில் ‘மெனின்கிடிஸ்’ எனப்படும் நோய் ஏற்பட்டதால் ஸ்கென் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் அந்த ஸ்கேன் படத்தை பார்த்து ஜிம்மா ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில் அதில் ஜிம்மாவின் மாமனாரான ஐயன் முகம் போன்ற உருவம் தெரிந்தது. ஐயன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். இந்த ‘ஸ்கேன்’ படம் குறித்து தனது கணவர் டேன் மற்றும் மாமியார் ஜோவிடமும் ஜிம்மா கூற முதலில் அதை நம்ப மறுத்த அவர்கள் பின்னர் ஸ்கேன் காப்பியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

இது குறித்து ஜிம்மா கூறும்போது, “எனக்கு 2015-ம் ஆண்டு கருக்கலைப்பு ஏற்பட்டு பின்னர் தான் வின்னி உருவானான். அப்போது இருந்தே பல சமயங்களில் என் மாமனார்தான் அவனை காப்பாற்றினார் என நம்புகிறேன். தற்போது குழந்தையின் நோயை கண்டறிந்து காப்பாற்றி வருகிறார். இதனால் தான் அவனுக்கு தாத்தா பெயரையும் சேர்த்து வின்னி ஐயன் என பெயர் வைத்துள்ளோம்” என்றார்

Leave a Reply