பெரியார் ராமரை செருப்பால் அடித்தது உண்மைதான்: வேலுபிரபாகரன்

ரஜினி கூறியது போல் ராமரை பெரியார் செருப்பால அடிக்கவில்லை என்றும் நடக்காத ஒன்றை, இல்லாத ஒன்றை ரஜினி இட்டுக்கட்டி கூறுவதாகவும் திராவிட இயக்கத்தினரும் பெரியாரிஸ்டுகளும் கூறிவந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பெரியாரிஸ்ட் வேலு பிரபாகரன் என்ற இயக்குனர் கூறியதாவது:

’ஆமாம் ராமரை பெரியார் செருப்பால் அடித்து உண்மைதான் என்றும், பெரியார் செய்த ஒன்றை பெரியாரின் ஆதரவாளர்கள் ஏன் மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, என்றும், கடவுளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் பலமுறை ராமரை செருப்பால் அடித்து இருக்கிறார் என்றும், இதை பெரியாரை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்

பெரியாரின் ஆதரவாளர் ஒருவர் ராமரை பெரியார் செருப்பால் அடித்ததை ஒப்புக் கொள்ளும் போது மற்ற பெரியாரின் ஆதரவாளர்கள் அதை மறுப்பது ஏன்? என்ற கேள்வி தற்போது நெட்டிசன்கள் இடையே எழுந்து உள்ளது

Leave a Reply