shadow

பெண்Money – இன்ஷூரன்ஸ் இன்றே எடுக்கணும்!

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்… இறந்தாலும் ஆயிரம் பொன்’ – இது பழமொழி… பழைய மொழி. கம்பீரத்தின் அடையாளமான யானைக் குச் சொல்லப்படும் அடைமொழி. அப்படியெனில் வீட்டில் உள்ள கம்பீரமான பெண்களின் உழைப்பும் விலைமதிப்பற்றதுதானே? சேமிப்பு என்பது வங்கிக் கணக்கு மட்டுமே அல்ல. லைஃப் இன்ஷூரன்ஸ் என்னும் உயிர்க் காப்பீட்டுத் திட்டங்களும் சேமிப்பே!

வேலைக்குச் செல்லும் பெண்களா கட்டும், குடும்ப நிர்வாகம் செய்யும் பெண்களாகட்டும்… காப்பீட்டுத் திட் டங்கள் உடனடியாகப் பலனிப்பதில்லை என்பதாலோ என்னவோ, அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், மற்ற சேமிப்புத் திட்டங்களைவிட முதன்மை யான இடத்தைப் பெறவேண்டியது, `லைஃப் இன்ஷூரன்ஸ்’ திட்டங்களே என்பதை ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

`ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன? அதில் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் எவை?’ என்று விளக்குகிறார் காப்பீட்டுத் திட்ட ஆலோசகர் சிவக்குமார்.

“ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் ஆண் களுக்கு மட்டுமே சாதகமான நடைமுறைகளைக் கொண்டிருந்ததாக நம்பப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், இக்காலத்தில் பெண்கள், குழந்தைகள் என எல்லோருடைய நலன் சார்ந்தும் மாறியுள்ளன.
பெண்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், அவற்றின் நடைமுறைகள், பலன் கள் குறித்து அறிவோம்.

எல்.ஐ.சி வழங்கும் ஜீவன் பாரதி-1

லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா மூலமாக, முழுக்க முழுக்கப் பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இது. 2003-ம் ஆண்டில் வெளியான ஜீவன் பாரதி திட்டத் தின் அப்டேட்டட் வெர்ஷன். இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் தொகை, முதிர்ச்சிக் காலம் முடிந்தபிறகு லாபத்துடன் திரும்பக் கிடைக்கும்.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரையிலான பெண்கள் பாலிசிதாரராக முடியும். 15 முதல் 20 ஆண்டுகள் வரை காப்பீடு செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை காப்பீடு செய்துகொள்ளலாம்.

ஆண்டுக்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகையைச் செலுத்தினால் போது மானது. தவணை முறையிலும் செலுத்த முடியும்.

எஸ்.பி.ஐ லைஃப் ஸ்மார்ட் வுமன் அட்வான்டேஜ் ப்ளான்

ஆயுள் காப்பீடு, சேமிப்பு மற்றும் அவசரக்கால உதவி ஆகிய மூன்று நலன்களை உள்ளடக்கி எஸ்.பி.ஐ அறிமுகப் படுத்தியுள்ள பெண்களுக்கான திட்டம் இது.

இத்திட்டத்தின் மூலம் 10 முதல் 15 ஆண்டுகளுக்குக் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும்.

குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் அதிக பட்சம் 10 லட்சம் ரூபாய் வரையிலான திட்டத் தைப் பெண்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

மாதத்தவணை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, ஆண்டுக்கொருமுறை என்று பிரித்துப் பணம் செலுத்த முடியும்.

கோல்டு பிளானில் ஆயுள் காப்பீடு, சேமிப்பு, பெண்களுக்கான அவசரக் காலத் தேவை ஆகியவையும் உண்டு.

பிளாட்டினம் திட்டத்தில் மேற்கூறிய மூன்றுடன் மற்ற அவசரக்காலத் தேவைகள் மற்றும் அதாவது, குடும்ப உறுப்பினர்களுக் காகவும், குடும்பம் சார்ந்த அவசரத் தேவைகள், உடல்நலக்குறைவுகளுக்காகவும் இதன்மூலம் காப்பீடு செய்துள்ள பெண்மணி பணம் பெற்றுக்கொள்ள முடியும்.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் ஸ்மார்ட் வுமன் யூலிப்

பெண்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்புத் திட்டம் இது. இதில் பெண்களுக்கு பிரசவக் காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கேன்சர் கோளாறுகளுக்கான காப்பீடும் உள்ளடக்கம்.

இத்திட்டத்தில் கிளாஸிக், பிரீமியர், எலைட் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் காப்பீடு பெறலாம்.

ஒருவேளை, பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு மருத்துவச் சோதனைகளில் அறியப்பட்டால், ஆயுள் காப்பீட்டின் முழுத்தொகையையும் முழுமையாக மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றுக்கொள்ள முடியும்.”

Leave a Reply