shadow

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிலும் ஊரடங்கையும் மீறி பலர் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்ததால் ஊரடங்கு நோக்கமே நிறைவேறவில்லை

இந்த நிலையில் வாகனங்கள் செல்வதற்கு தேவையான பெட்ரோல் நிலையங்களை மூடி விட்டாலே ஊரடங்கு ஒழுங்காக நடைபெறும் என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்

காவல்துறையினர் மருத்துவர்கள் முன்களபணியாளர்களுக்கு மட்டும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போட அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றபடி பொதுமக்களுக்கு பெட்ரோல் போட அனுமதிக்க கூடாது என்ற ஒரு விதியைக் கொண்டு வந்தாலே போதும் ஊரடங்கு தானாகவே சரியாக நடக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்