புறநானூறுக்கு பதிலாக சம்பந்தம் இல்லாமல் திருக்குறளை கூறிய ஆ.ராசா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார்.

வரி வசுலிப்பதில் களத்தில் புகுந்த யானை போல், இருக்கக்கூடாது என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூறி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, புறநானூறு பாடலை எடுத்துக்காட்டிய அமைச்சரின் பட்ஜெட்டில், வருவாய் இல்லாத மக்களிடம் வரி வசூல் செய்வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். திறமையான அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட ஆ. ராசா, அதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு திருக்குறளை சான்றாக சுட்டிக்காட்டினார்

Leave a Reply