நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 13 வது போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 191 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 70 ரன்களும், பொல்லார்டு 47 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது
நேற்றைய போட்டியில் பூரண் 44 ரன்களும் மயங்க் அகர்வால் 25 ரன்கள் ரன்களும் மும்பை பந்துவீச்சாளர் பும்ர்அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹர் 2 விக்கெட்டுகளையும் பாட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதும் பஞ்சாப் அணி 6வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply