shadow

புதுப்பொலிவு பெற்று வரும் 2ஆம் நூற்றாண்டு திரையரங்கம்

சிரியா நாட்டில் உள்ள போஸ்ரா நகரில் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரோமன் என்ற பிரமாண்டமான திரையரங்கம் யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த திரையரங்கம் கடந்த 8 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரில் சேதம் அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு படைகள் வசம் போஸ்ரா நகர் வந்தது. இந்த நிலையில் இந்த ரோமன் திரையரங்கம் சீரமைக்கப்பட்டு, அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பழைய பொலிவை பெற்றுள்ளது.

சிரியாவின் பன்முக கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பறைசாற்றும் வகையிலும் ரோமன் திரையரங்கு சாட்சியாக உள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த திரையரங்கம் மீண்டும் விரைவில் திறக்கப்படவுள்ளது.

Leave a Reply