புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க டெல்லியில் கூட்டம்!

புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து விவாதிக்க அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தலைமையில் கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்ப்ட்டுள்ளது

ஜூன் 22-ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கை வரைவில் உள்ள அம்சங்கள், முரண்பாடுகள் குறித்து கருத்து கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது

Leave a Reply