புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து

புதிய கல்விக்கொள்கையின் பரிந்துரையின்படி இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் இந்தி எதிர்ப்பு மீண்டும் டிரெண்டுக்கு வந்துள்ளது

இந்த நிலையில் எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் தற்போது வெளியாகி இருப்பது வரைவு அறிக்கை மட்டுமே என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இந்த பிரச்சனை குறித்து ஊடகங்களும், தமிழக அரசியல்வாதிகளும் மிகைப்படுத்தி பெரிதாக்குவதாகவும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply