shadow

புகை பிடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் தீமைகள்

ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல நல்ல விஷயங்களை செய்து வந்தாலும் குடி, புகை போன்ற ஒருசில தீய பழக்கங்களும் தற்போது பெண்கள் மத்தியில் பரவியுள்ளது. குறிப்பாக பெண்கள் புகைபிடிப்பதால் அவர்களுக்கு இளவயதிலேயே மாரடைப்பு நோய் வர அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன

ஈஸ்ட்ரோஜென் என்னும் பெண்களுக்கான ஹார்மோன் அவர்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால் மாதவிடாயைப் போலவே புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண இரத்த கொழுப்பு அமிலங்கள் ஆகியன இந்தப் பாதுகாப்பை முறித்து இருதய நோயை ஏற்படுத்துகின்றன.

சாதாரணப் பெண்களை விடப் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது. ஆண்களைவிட, பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது அதை தவறாகக் கண்டுகொள்கிறார்கள், ஏனெனில் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் பெண்களுக்கு வருவதில்லை.

அவர்களுக்குக் காய்ச்சல் வந்தது போல மிகவும் சோர்வாகவோ அல்லது மூச்சு திணறல் அல்லது குமட்டல்/வாந்தி அல்லது முதுகு, கை,தாடை ஆகிய ஒன்றில் வலி வரலாம்.

இதன் விளைவாகச் சிலருக்கு மாரடைப்புக்குப் பின்னர் வாழ்நாளை அதிகரிக்கும் பீடா பிளாக்கர்ஸ், ACE இஹிபிடர்ஸ், ஆஸ்பிரின் போன்ற உயிர் காப்பான்கள் கிடைக்கின்றது. 38% பெண்கள் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள் ஆண்களில் 25% பேர் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள்.

Leave a Reply