shadow

இது தீவிரமானால் இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்

தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், /ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்னால் முதலில் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். க்ளின்சிங் மில்க் இருந்தால் அதனை தடவியும் முகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளலாம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். அதன் பிறகு இந்த கலவையை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். எப்போதும் கீழிருந்து மேலாக அப்ளை செய்வது நல்லது.

முகம் முழுவதும் அப்ளை செய்து முடித்ததும் கழுத்துக்கும் அப்படியே தடவுங்கள். முகத்திற்கு தருகிற முக்கியத்துவத்தை கழுத்துக்கு யாரும் கொடுப்பதில்லை. இதனால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து வேறொரு நிறமாகவும் தெரியும். இதனை தவிர்க்க கழுத்துக்கும் சேர்த்தே ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனை கழுத்துக்கும் சேர்த்து போட்டபிறகு சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நீங்கள் கழுவிடலாம்.

கழுவியதும் இது கூலிங் எஃபக்டை கொடுக்கும். அதோடு சருமத்திலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும். பீட்ரூட்டில் அதிகப்படியான ஃபாலிக் அமிலம் மற்றும் அத்தியவசியமான விட்டமின்கள் இருக்கிறது. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன் சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது. இதனை நீங்கள் வாரம் ஒரு முறை என இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து முயற்சித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் என்றால் உங்களுக்கு அடிக்கடி பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைகள் ஏற்படும்.இவர்களுக்கு பீட்ரூட் சாறு ஃபேஸ்பேக் மிகச் சிறந்த தீர்வாக அமையும். சருமத்தில் பேக் போடுவது மட்டுமின்றி தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும் செய்திடலாம். பீட்ரூட்டின் சுவை பிடிக்காதவர்கள் அதில் வெள்ளரி மற்றும் கேரட்டையும் சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். இவற்றை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்புகளையும் போக்கிடும்.

இதனை சருமத்தில் தடவுவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் நீக்குவதுடன் ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்துவதால் பொலிவான சருமம் உண்டாகும். ஃபேர்னஸ் க்ரீம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிலருக்கு அதிலிருக்கும் கெமிக்கல்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.இதனை தவிர்க்க பீட்ரூட் சாறு பயன்படும்.

இன்றைக்கு பலரது கவலையாக இருப்பது கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் தான். அதனை போக்கவும் இந்த பீட்ரூட் ஃபேஸ்பேக் பயன்படும். அதோடு இவை உங்களது ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துவதால் இவை கருவளையத்தை போக்கிட உதவுகிறது. அதோடு முகத்தில் இருக்கிற கருந்திட்டுக்கள் எல்லாம் போக்கிடும்.

உங்களுக்கு 30 வயதை தாண்டி விட்டாலே சருமத்தை இன்னும் சிரத்தையாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஃபேஸ்பேக் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும் உதவுகிறது. இதனை வாரம் இரண்டு முறை நீங்கள் பயன்படுத்தினால் விரைவில் சிறந்த பலனை பார்க்கலாம்.