பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழுக்கு இடமில்லை என்பதால் மீண்டும் போராட்டமா?

#உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிராந்திய மொழிகளில் தமிழ்மொழி இடம் தரவில்லை என்பதால் மீண்டும் ஒரு தமிழ் மொழிப் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளான தெலுங்கு இந்தி ஒரியா மராத்தி அசாமி, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட்டது.

உச்ச நீதிமன்ற கூடுதல் கட்டடம் திறப்பு விழாவில் தீர்ப்பின் நகலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் நீதிபதி வழங்கினார் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வழங்கினார். ஆனால் அவர் வழங்கிய நகல்களின் பட்டியலில் தமிழ் மொழி இடம்பெறவில்லை.

அஞ்சல் தேர்வு தமிழில் நடத்தாததால் தமிழக அரசியல்வாதிகள் போராட்டம் நடத்திய நிலையில் இதற்கும் ஒரு போராட்டம் தமிழர்கள் சார்பில் எழ வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply