பிரபல நடிகைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கணவர்!

மதுரா தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நடிகை ஹேமா மாலினிக்கு ஆதரவாக அவர் கணவரான நடிகர் தர்மேந்திரா பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான தர்மேந்திரா மற்றும் ஹேமாமாலினி இருவரும் ஒன்றாக சேர்ந்து நேற்று வாக்கு சேகரித்தனர். தமது மனைவிக்காக வாக்குகளை நடிகர் தர்மேந்திரா சேகரித்தபோது பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

விவசாயியின் மகனாகப் பிறந்து சிறுவயதில் வயல்களில் கடுமையாக உழைத்ததாக கூறிய தர்மேந்திரா, ஹேமாமாலினிக்காக வாக்களிக்காவிட்டால் ஷோலே படக்காட்சி போல தண்ணீர் தொட்டி மீது ஏறி குடிபோதையில் ரகளை செய்யப் போவதாக அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டதை அனைவரும் ரசித்தனர்.

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று ஒவ்வொரு இந்தியனும் விரும்புவதாகவும் தர்மேந்திரா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.

Leave a Reply