shadow

பிரபல தமிழ் நடிகர் திடீர் விவாகரத்து: கோலிவுட் அதிர்ச்சி

vishnu vishalகடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால் அதன் பின்னர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுபட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

“நானும் ரஜினியும் ஒரு வருட காலமாக பிரிந்து இருந்த நிலையில் இப்போது விவாகரத்து நடந்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான மகன் இருக்கிறான். எங்கள் மகனுக்கு பிரிந்து வாழ்ந்த நிலையிலும் ஒரு நல்ல பெற்றோராக இருந்து அவனுக்கு தேவையான நல்லது அனைத்தையும் செய்வோம்.

பல வருடங்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் கடந்துள்ளோம். இனி ஒரு நல்ல மரியாதைக்குரிய நண்பர்களாக இருப்போம்.

இந்த நிகழ்வுக்கு பிறகு, எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொண்டு எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்

Leave a Reply