பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் சந்தானம்

ஜெயம்கொண்டான்’ முதல் பூமராங் வரை பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். காமெடி மற்றும் சமூக கருத்து அடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்த படத்தை ஆர்.கண்னன் இயக்குவதோடு ஆர். எம்.கே.ராம்பிரசாத் என்பவருடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார்.

சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் ஜான்சன் இயக்கி வரும் A1 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது

Leave a Reply