shadow

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு உத்தரவால் ரூ.3800 கோடி இழப்பு: எஸ்பிஐ

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க உத்தரவு காரணமாக ரூ3800 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று எஸ்பிஐ வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார். அதன்பின்னர் சிலமாதங்கள் கழித்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளும் விரைவில் புழக்கத்திற்கு வர இருக்கின்றன.

இந்த நிஅலியில் மோடியின் பணமதிப்பிழப்பு உத்தரவுக்குப் பின்னர் நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. சிறிய கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை ஸ்வைப்பிங் மிஷின்கலை வங்கிகள் வழங்கியுள்ளன. இதனால் மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என ஸ்டேட் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதனால் ஸ்வைப்பிங் எந்திரம் வழங்கிய செலவை ஈடுகட்ட முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இதன் மூலம் வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்றத்தில் ஆண்டுக்கு ரூ.3800 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply