shadow

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அரவிந்தசாமி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளது. அனேகமாக பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமலுக்கு இணையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சேனல் நிர்வாகம் பலரிடம் பேசி வருகிறது. விஜய், சூர்யா உள்பட பலரிடம் பேசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அரவிந்தசாமியிடம் பேசி வருவதாகவும், அவரிடம் இருந்து பாசிட்டிவ் பதில் கிடைத்துள்ளதால் அனேகமாக பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவிக்கு அரவிந்தசாமி புதியவர் அல்ல. ஏற்கனவே இதே சேனலில் ஒளிபரப்பான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியை மற்ற நடிகர்களை விட அரவிந்தசாமி சிறப்பாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply