பிக்பாஸ் வின்னரை மாற்றிய ஒரே ஒரு பாட்டு!

பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார்? என்ற போட்டியில் புதன்கிழமை வரை லாஸ்லியா தான் முன்னணியில் இருந்தார். அவருக்கும் முகினுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இருந்தது.

ஆனால் புதன்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் முகின் ஒரு பாட்டு பாடினார். ‘நீதான்.. நீதான்… என்ற பாடல் பயங்கர ஃபேமஸ் ஆகிவிட்டது. இந்த ஒரே ஒரு பாட்டால் முகினுக்கு ரசிகர்கள் குவிந்தனர். குறிப்பாக பெண்கள் முகினுக்கு திடீர் ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர்.

இந்த பாடலுக்கு பின் வாக்கெடுப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. முதல் இடத்தில் இருந்த லாஸ்லியா இந்த ஒரே பாட்டால் பின்னுக்கு தள்ளப்பட்டு முகின் முன்னுக்கு சென்றுவிட்டார். 104 நாட்களில் கொடுக்காத வெற்றியை முகினுக்கு ஒரே ஒரு பாட்டு கொடுத்துவிட்டது

Leave a Reply