’பிகில்’ போட்டியாக திடீரென தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் அஜித் படம்

தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக கருதப்பட்ட ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து ஒதுங்கிவிட்டது

இந்த நிலையில் ‘பிகில்’ போட்டியாக அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆம், ‘நேர் கொண்ட பார்வை திரைப்படம் ஜீடிவியில் தீபாவளி அன்று ஒளிபரப்பவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் ‘பிகில்’படத்தை பார்த்து கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அஜித் ரசிகர்கள் வீட்டில் உட்கார்ந்து அஜித்தின் நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்த்து கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

//twitter.com/ThalaAjith_FC/status/1182654688740536326

Leave a Reply