பிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி!
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் ரூபாய் 300 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் பிகில் படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் அந்த படத்தைத்தான் இன்னும் பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகில் படத்தில் அப்பா விஜய் நடித்த ராயப்பன் கேரக்டருடன் நடித்த முக்கிய நடிகர் ஆனந்தராஜ். இவர் நடித்த காட்சிகள் பெரும்பாலும் படத்தில் இடம்பெறவில்லை என்று ரிலீஸின் போதே கூறப்பட்டது
இதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிகில் படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் தனக்கு ஏற்பட்ட மன வலியால் தான் இந்த படத்தைதான் பார்க்க விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.