பாட்டு முழுவதும் ‘அண்ணாத்தே’: தலைவர் 168’ படம் குறித்த புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’தலைவர் 168’ படத்தின் டைட்டில் ‘அண்ணாத்தே’ என்று இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் கம்போஸ் செய்த ஒரு பாடலில் முழுக்க முழுக்க ‘அண்ணாத்தே’ என்ற வார்த்தை அதிக முறை வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த படத்தின் டைட்டில் ‘அண்ணாத்தே’ என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த பாடல் ரஜினியின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை படத்தில் வரும் ஓபனிங் பாடல் போல இந்த பாடலை பிரம்மாண்டமாக படமாக்க இயக்குனர் சிறுத்தை சிவா முடிவு செய்திருப்பதாகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியின் ஓப்பனிங் பாடல் ஒன்று தியேட்டரை எழுந்து ஆடும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply