shadow

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணியை நேற்று உறுதி செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருவதாகவும், அவருடைய இன்றைய பயணத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அமித்ஷாவின் பயணம் ரத்து ஏன்? என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் இந்த பயண ரத்து அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

பாஜக-அதிமுக கூட்டணியில் இணையும் என்று கருதப்பட்ட பாமக, திடீரென அணிமாற முடிவு செய்துள்ளதாலும், பாஜக கூட்டணிக்கு தம்பித்துரை போன்ற தலைவர்களின் கடும் எதிர்ப்பாலும் அமித்ஷா பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது

 

Leave a Reply