shadow

பாஜகவை தனிமைப்படுத்த அடுத்த அதிரடி: தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையை துவக்கிய அதிமுக

தமிழகத்தில் அதிமுக-பாஜக ஒரு கூட்டணியாகவும், திமுக – காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் பெற்று பாமக இணைந்தது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியது. இதுகுறித்த பேச்சுவார்த்தைக்காக தேமுதிகவின் சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தங்கமணி விரைந்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகி விஜயகாந்துடன் அதிமுக தலைவர்கள் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இணைந்துவிட்டால் பாஜக தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply