பாஜகவுடன் ஒட்டிக்கொள்ள திமுக தயங்காது: டிடிவி தினகரன்

மத்தியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள திமுக தயங்காது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று நீலகிரி தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் டிடிவி தினகரன் பரப்புரை செய்தார். அப்போது பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று அறிவித்த அமமுகவுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று கூறினார்.

மேலும் மத்தியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர்களுடன்
ஒட்டிக்கொள்ள திமுக தயங்காது என்றும் அதனால் திமுகவுக்கு ஓட்டு போடுவதும் பாஜகவுக்கு ஓட்டு போடுவதும் ஒன்றுதான் என்றும் அவர் மேலும் கூறினார்

Leave a Reply