shadow

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ரஜினி-கமல்? பிரதமர் மோடியின் பதில்

டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த பாரத பிரதமர் நரேந்திரமோடி தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, தங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், தங்களுடன் சேர விரும்புபவர்களை அரவணைத்து சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் தங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது எனவும் மோடி கூறினார்.

ஆனால் கமல் ஏற்கனவே பாஜக கூட்டணியில் சேர மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ரஜினியும் பாஜகவின் உறவை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ரஜினி, கமல் சேர்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

 

Leave a Reply