shadow

‘பாகுபலி’ படத்திற்கு சவால் கொடுக்குமா பத்மாவதி?

இந்திய திரையுலகில் வசூல் புரட்சி செய்த படம் ‘பாகுபலி மற்றும் ‘பாகுபலி 2’ திரைப்படங்கள். இந்த நிலையில் பாகுபலி படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் பிரமாண்டமான காட்சிகள், போர்க்காட்சிகள் உள்ளிட்டவைகளை கொண்டு வெளியாகவுள்ள திரைப்படம் ‘பத்மாவதி

தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனேவும், ரதான் சிங் வேடட்த்தில் ஷாரதா கபூரும், அலாவுதின் கில்ஜி வேடத்தில் ரன்வீர்சிங்கும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சஞ்சய் லீலா பன்ஷாலி இயக்கியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply