பாகுபலி நடிகருடன் இணைந்த விஷ்ணுவிஷால்: டைட்டில்-ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்த ராணா டகுபதியுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘காடன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

பிரபுசாலமன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது

யானைப் பாகன் மாறன் என்ற கேரக்டரில் விஷ்ணு விஷால் நடித்துள்ள இந்த படம் கும்கி படத்தின் இரண்டாம் பாகம் என கருதப்படுகிறது. இந்த படம் ஏற்கனவே இந்தியில் வெளியான ஒரு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது . மிகவும் பிரமாண்டமாக ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply