shadow

பாகிஸ்தான்: இந்தியாவில் இருந்து இறக்குமதி நிறுத்தத்தால் விண்ணை தொட்ட தக்காளி விலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு தற்கொலை படையினர் தாக்குதலில் இந்திய துணை ராணுவனத்தினர் 40 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தான் நாட்டின் உறவுகளை இந்தியா துண்டித்து வருகின்றது. குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே இருந்த ஏற்றுமதி, இறக்குமதி அறவே நின்றுவிட்டது

இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளதாகவும் இதற்கு காரணம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டு வந்ததாகவும், தற்போது தக்காளி இறக்குமதி அறவே நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது

மற்ற நாடுகளிடம் இருந்து பெறுவதை விட இந்தியாவிடம் இருந்தே பாகிஸ்தான் குறைந்த விலையில் தக்காளியை பெற்று வந்தது. தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி மட்டுமின்றி பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது.

Leave a Reply