பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமனம் செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடந்த சில வாரங்களாக தீவிரமாக இருந்தது. இந்தப் பதவிக்கு பல முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல் ஹக்கை தேர்வுக்குழு தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அதேபோல் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது

Leave a Reply