shadow

பழிவாங்குமா? அடிவாங்குமா? இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி

கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியை குவித்து 100% வெற்றியுடன் நாடு திரும்பியது.

இலங்கை தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு வெற்றியை கூட ருசிக்க முடியாத நிலையில் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.

தாய்நாட்டில் அடைந்த தோல்விக்கு இந்தியாவில் வெற்றியை குவித்து பழிவாங்குமா? அல்லது இந்தியாவிடம் மீண்டும் அடிவாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply