shadow

பருமனான குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட…

15-15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் உடல்பருமனாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப் பழக்கங்களில் மாற்றம் போன்றவற்றால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இவர்கள், கொழுகொழுவென இருக்கிறார்களே தவிர, ஆரோக்கியம் கிடையாது.

இளம் வயதிலேயே உடல்பருமனாக இருந்தால், இளமையிலேயே சர்க்கரை நோய், இதய நோய்கள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் வராமல் தடுக்க, எடை குறைப்புக்கான பொடி இதோ…

கொழுப்பைக் கரைக்கும் பொடி

தேவையானவை: ஆளிவிதை (ஃபிளாக்ஸ் சீட்ஸ்), சீரகம், வெந்தயம் – தலா 100 மி.கி.

செய்முறை: ஆளிவிதை, சீரகம், வெந்தயம் மூன்றையும் சேர்த்து அரைக்க வேண்டும். காலை தூங்கி எழுந்ததும், ஒரு டீஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துவரலாம்.

பலன்கள்

தொடர்ந்து 10 நாட்கள் அருந்தினாலே அரை கிலோ வரை எடை குறையும். மூன்று மாதங்களில் நல்ல பலனை உணர முடியும்.

ஆளிவிதையில் உள்ள சத்துக்கள் இதயத்தைப் பாதுகாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்கும்.

வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்தும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வாய் முதல் மலக்குடல் வரை உள்ள செரிமான மண்டல உறுப்புகளை மேம்படுத்தி, நோய் பாதிப்பில் இருந்து காக்கும்.

புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயலாற்றும்.

Leave a Reply