பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு மேலும் ஒரு விருது

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படம் தேசிய விருதினை மிஸ் செய்தாலும் பல்வேறு விருதுகளை பெற்றது. விருதுகளுக்கு மேலாக இந்த படம் மக்களின் மனதை கவர்ந்தது

இந்த நிலையில் புதுச்சேரி அரசின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் படம் தேர்வாகியுள்ளது. வரும் 13ஆம் தேதி நடக்கும் விருது வழங்கும் விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை முதலமைச்சர் நாராயணசாமி , பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வழங்குகிறார்.

Leave a Reply