பத்தாம் வகுப்பு வரை தாய் மொழி கட்டாயம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

பத்தாம் வகுப்பு வரை தாய் மொழியை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என மசோதா ஒன்று சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்சி உள்பட ஒரு சில பள்ளிகளில் மராத்தி மொழி இல்லாமல் வெறும் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கபடுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் மராத்தி மொழி பயில வேண்டியது கட்டாயம் என அமைச்சர் சுபாஷ் தேசாய் என்பவர் கடந்த வாரம் அறிவித்தார்

இதற்கான சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் சட்டப்பேரவையில் நேற்று கூறியதாவது:

அனைத்து பள்ளிகளிலும் பத்தாம்வகுப்பு வரையிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்குவது அரசின் கொள்கைமுடிவாகும். அரசு பள்ளிகளை தவிரசிபிஎஸ்இ, ஐபி, ஐசிஎஸ்இ பள்ளிகளில்மராத்தியை கட்டாயமாக்குவது தொடர்பாக ஆலோசித்து கீழ் அவையில் முடிவு செய்யப்படும். தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா மூலம் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும்.

இதன் மாதிரி திட்டம் குறித்து அரசுஆய்வு செய்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மாநில மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிவசேனா எம்எல்ஏபாஸ்கர் ஜாதவ் பேசுகையில், ‘‘மராத்திமொழியை கட்டாயம் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன. இதுகுறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்

Leave a Reply