shadow

பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: பெரும் பரபரப்பு

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை உமேஷ் ஜாதவ் என்பவர் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த உமேஷ் ஜாதவ் என்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, ராஜினாமா கடிதத்தை கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்தார்.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் பெங்களுருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தபோது அக்கூட்டத்தில் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் உமேஷ் ஜாதவ்வும் ஒருவ என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply