shadow

பண மதிப்பு நீக்கம் சூதாட்டம்: பொருளாதார நிபுணர் சஞ்சய பாரு கருத்து

பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார ரீதியாக சூதாட்டம் ஆனால் அரசியல் ரீதியாக பார்த் தால் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கக் கூடிய நடவடிக்கை என்று பொருளாதார நிபுணர் சஞ்சய பாரு கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக கருத்தரங் கத்தை திருவல்லிக்கேணி கலாசார மையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கத்தில் பொருளா தார நிபுணர் மற்றும் எழுத்தாளர் சஞ்சய பாரு மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் என். வாகுல் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் சஞ்சய பாரு பேசியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கை சூதாட்டம். ஆனால் அரசியல் ரீதியாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பொருளாதார வகையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நகர்வுகள் நடப்பதை வைத்துதான் இது மாற்றத்தை ஏற்படுத்தியிருக் கிறதா என்று கூற வேண்டும். பொருளாதார சூதாட்டம் என்று கூறுவதற்கு முக்கிய காரணம் இந்த நடவடிக்கைக்கு நம்மிடையே வரலாற்று முன்னுதாரணம் இல்லை. இந்த நடவடிக்கை எடுத் தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதற்கு ஆய்வுகளும் நம் மிடையே இல்லை. பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் ஆய்வின் அடிப்படையில் வைத்து மட்டுமே எடுக்க முடியும். ஒரு நல்ல பொருளாதாரத் தின் அடிப் படை இவைதான். ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கை வரலாற்று முன்னு தாரணத்தை வைத்து எடுக்கப்படவில்லை என்று சஞ்சய பாரு தெரிவித்தார்.

இதையெடுத்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் என்.வாகுல் பேசியதாவது: கறுப் புப் பணத்தையும் ஊழலையும் நம் நாட்டில் தவிர்க்க முடியத தாகி விட்டது. பிரதமர் மூன்று நோக் கங்களோடு இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார். அவரது நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை சரியாக திட்டமிடாமல் இந்த அரசு அறிவித்துவிட்டது. உதாரணமாக நம் நாட்டில் 1 லட்சத்துக்கும் மேலான ஏடிஎம் மையங்கள் உள்ளன. புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு அளவுகளில் அச்சடிக் காமல் வெவ்வேறு அளவுகளில் அச்சடித்ததால் புதிய நோட்டு களின் அளவுக்கு ஏற்ப ஏடிஎம் மையங்களை சீர்படுத்த வேண் டியிருந்தது. இதனால் மிகப் பெரிய அளவுக்கு காலதாமதமும் செலவும் ஆகியது. பழைய அளவுகளில் அச்சடித்திருந்தால் இதுபோன்ற நடைமுறை சிக்கல் களை தவிர்த்திருக்கலாம் என்று என்.வாகுல் தெரிவித்தார்.

Leave a Reply