பண்டிகை கால விற்பனை: அமேசான், பிளிப்கார்ட் விற்பனையில் சாதனை

இந்தியா உள்பட உலகம் முழுவதும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் பண்டிகை கால சிறப்பு சலுகை விற்பனை என்ற ஒரு சலுகையை சமீபத்தில் அறிவித்தது

இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனை தொடங்கிய 36 மணி நேரத்தில் அமேசான் நிறுவனம் 750 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை செய்துள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது

இந்த இரு நிறுவனங்கள் மட்டும் இந்தியாவில் பல கோடிக்கு இரண்டே நாட்களில் வியாபாரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் 5 நாட்கள் சலுகை இருப்பதால் விற்பனை சதவீதம் அதிகரிக்கும் என்றும் ஸ்மார்ட் போன்களை அதிக மக்கள் வாங்கி வருவதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது

அதேபோல் ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் 35 ஆயிரம் கோடி மதிப்பிற்கு தங்கள் இணையதளம் விற்பனையை சாதித்து வருவதாகவும் ஆனால் இந்த ஆண்டு அதை விட அதிகமாக விற்பனை ஆகி இருப்பதாகவும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் அமேசான் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை கால சலுகை விற்பனை செய்வதால் அரசின் ஜிஎஸ்டி வருமானம் பாதிப்பதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி குற்றஞ்சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிறுவனங்களில் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply