shadow

பணமதிப்பிழப்பு, குறைந்த வட்டி எதிரொலி: மக்களிடம் அதிகரித்த ரொக்க கையிருப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பிற்கு பின்னர் பொதுமக்கள் கையில் ரொக்க கையிருப்பு அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளதுகடந்த நிதியாண்டில், 9 புள்ளி 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், இந்த நிதி ஆண்டில் 4 புள்ளி 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதே நிதியாண்டில், மக்களிடம் இருந்த ரொக்க பண கையிருப்பு அளவு, 3 புள்ளி 1 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 4 புள்ளி 7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2016-ல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, மக்களிடம் ரொக்க கையிருப்பு குறைந்து, வங்கிகளில் டெபாசிட் அதிகரித்தது. தற்போது இந்த நிலைமை மாறி, வங்கிகளில் டெபாசிட் குறைந்து, ரொக்க கையிருப்பு அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, டெபாசிட்டுக்கு குறைந்த வட்டி போன்றவை ரொக்க கையிருப்பு அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், வங்கிகளில் டெபாசிட் குறைந்தாலும், மறுபுறம் பங்கு மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.

2017-ல் 36 ஆயிரத்து 265 கோடியாக இருந்த இதன் அளவு, 2018-ல் 1 புள்ளி 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல, புதிதாக பெறப்பட்ட கடன் அளவு, 2017-ல் 2 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 2018-ல் 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply