shadow

பட்டிமன்ற லியோனியின் மகன் நடிகராகிறார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனியின் மகன் லியோ சிவகுமார், விஜய்சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன் என்ற படத்தின் மூலம் நடிகராகிறார். இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் சீனுராமசாமி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, ”மாமனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் தம்பி லியோ சிவக்குமார், திறன்மிகு கலைஞர். இவர் நாடறிந்த பேச்சாளர் திரு.லியோனி அவர்களின் புதல்வர். முறைப்படி எங்கள் நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிக்கின்றார்’ என்று கூறியுள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் ஷாஜிசென் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

 

Leave a Reply