shadow

பட்டாசு வெடிக்கும் நேரம்: 6 மாதம் ஜெயில் என சென்னை போலீஸ் எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மற்றும் தமிழக அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதனை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.

இன்று இரவு முதல் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை தொடங்கவுள்ள நிலையில் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகர பகுதியில் அரசு நிர்ணயித்துள்ள 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில் என்றும், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான நேரம் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போலீஸ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply