shadow

பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு


collegeஇது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பகுதி நேர விரிவுரையாளர்களாகப் பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறார்கள். இப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப் பணிக்குத் தேவையான கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து www.bangaloreuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தலைவர், இயற்பியல் துறை, பெங்களூரு-560056 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply