சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் இல்லாமல் குறைவான பயணிகளுடன் சென்று கொண்டிருப்பதால் விரைவில் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று அதிகாலை 4 மணியில் இருந்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கூட்டம் இல்லை என்பதால் 20% பேருந்துகளே இயங்கின என ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக சென்னையில் இருந்து 700 பேருந்துகள் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்றும் ஆனால் இன்று 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு இருப்பதாகவும் ஆம்னி பேருந்துகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது

இதே நிலை நீடித்தால் ஆம்னி பேருந்துகளை நிறுத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply