shadow

நீட் தேர்வுக்கு பதிவு செய்வதில் சிக்கல்: மாணவர்கள் அவதி

மருத்துவ படிப்புக்கு கட்டாயம் என்று அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கு இன்று முதல் பதிவுகள் ஆரம்பம் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று ஒரே நேரத்தில் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்ய முயன்றனர். ஆனால் நீட் தேர்வுக்கு பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது

காலை 11 மணி முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சர்வர் கோளாறு காரணமாக பதிவு செய்ய முடியவில்லை என்பதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு நவம்பர் 30 வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply