shadow

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு: புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து பழைய நடைமுறையிலேயே மாணவர்களை சேர்க்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு: புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை:

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் இந்த நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதுநிலை படிப்புகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

Leave a Reply