shadow

நீங்கள் இணையதள அடிமையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

உலகில் உள்ள பெரும்பாலானோர் தற்போது இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கபூர்வமான விஷயத்திற்கு மட்டுமின்றி அழிவுபூர்வமான விஷயத்திற்கும் இணையதளம் பயன்படுகிறது. ஒருசிலர் இணையதளத்திற்கு அடிமையாகியும் விடுகின்றனர். இந்த நிலையில் நீங்கள் இணையதள அடிமையா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

தகவல்களை அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக,

கட்டுப்பாடில்லாமல் இணையதள விளையாட்டுக்களை கணினி அல்லது கைபேசியில் விளையாடுவதற்காக,

சூதாடுவதற்காக,

விதவிதமான பொருள்கள் வாங்குவதற்காக,

பேஸ்புக், ட்விட்டர், மூலம் கிடைத்த இணைய நண்பர்களுடன், உறவுகளுடன் சாட் செய்வதற்காக,

பாலின்பத்துக்காக,

– இந்தக் காரணங்களுக்காகத்தான் அதிகளவில் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பழக்கமானது நாளடைவில் இவர்களை அடிமைகளாக மாற்றிவிடும். அதற்குக் காரணம் போதைப்பழக்கத்துக்கு காரணியாய் விளங்கும், மூளையின் இன்ப மையத்தில் (pleasure centre) சுரக்கும் டோபமைன்(dopamine) செயல்பாடும், இன்பம் தரும் எந்தவொரு செயலையும் திரும்பத் திரும்ப செய்ய தூண்டும், செயல்முறைப் பழக்குதல் (operant conditioning) என்ற கோட்பாடும்தான்.

கீழ்கண்ட எட்டு அறிகுறிகளில் ஐந்து அறிகுறிகள் இருக்குமாயின் நீங்கள் இணையதளத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்று பொருள்.

1. நாள் முழுவதும் இன்டெர்நெட் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பது ((pre occupation).

2. மன திருப்திக்காக, நெட்டிலேயே அதிக நேரத்தை செலவழிப்பது (tolerance)

3. நெட் உபயோகத்தை குறைக்கவோ, நிறுத்தவோ முயன்று மீண்டும் மீண்டும் தோற்றுப் போவது (loss of control)

4. நெட் உபயோகத்தை குறைக்கவோ நிறுத்தவோ முயன்றால் அமைதியின்மை, மூளை மந்தமாகுதல், மன அழுத்தம், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உணர்வது (withdrawal)

5. உத்தேசித்த நேரத்தைவிட அதிக நேரத்தை நெட்டில் செலவிடுவது

6. முக்கிய உறவுகள், தொழில், கல்வி, வேலை வாய்ப்புகளை இழக்கும் அளவுக்கு /ஆபத்து ஏற்படும் அளவுக்கு இணையத்தை உபயோகிப்பது (dysfunction and harmful use)

7. இணையத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை மறைக்க, குடும்பத்தார் /சிகிச்சை அளிப்பவரிடம் பொய் கூறுவது (lying)

8. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவோ/ மன உளைச்சலிலிருந்து விடுபடவோ இணையத்தை உபயோகிப்பது (avoidance/escapism)

Leave a Reply