shadow

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட 6 பேர்களில் ஒருவர் சிறை வளாகத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறுவர் சிர்திருத்த பள்லியில் சிறை தண்டனை அனுபவித்து அதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீதியுள்ள முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

Leave a Reply