நியூசிலாந்து நிதான ஆட்டம்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் மோதி வருகின்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குப்தில் மற்றும் நிகோலஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை அளித்தனர். இருப்பினும் 7 ஆவது ஓவரில் 19 ரன்கள் எடுத்த நிலையில் குப்தில் அவுட் ஆனார் அதன் பின்னர் கேப்டன் வில்லியம்சன் 30 ரன்களிலும் நட்சத்திர ஆட்டக்காரர் டைலர் 15 ரன்களிலும் அவுட் ஆகினர்

இருப்பினும் லாதம் மற்றும் நீஷம் நிதானமான ஆட்டத்தை விளையாடினார். லாஷம் 56 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 47 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த நிலையில் சற்று முன் 50 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 242 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களான ஓட்ஸ் மற்றும் பிளங்கிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர் அதேபோல் வுட்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 242 என்ற இலக்கை நோக்கி இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ள இங்கிலாந்து அணி இலக்கை எட்டி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

242 is the target to England by Newzeland

Leave a Reply